தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் துவங்கியுள்ள நிலையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருப்பதுசந்தோசமான செய்தியாகும்.சென்னை ,மதுரை உள்ளிட்ட12 க்கும் மேற்பட்ட நகரங்களில் வெயில் சதம் அடித்துவருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யலாம். நாளை நீலகிரி, கோவை , திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி , தருமபுரி, சேலத்தில் கனமழை பெய்யலாம்.
நாளை மறுநாள் நீலகிரி , கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரியிலும் கனமழை பெய்யலாம். சென்னையில் 2நாட்களுக்கு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.,மேலும் ‘தெற்கு அந்தமான் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. மேலடுக்கு சுழற்சி வரும் 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாகி பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுவடையும். என தெரிவித்துள்ளது. இதனால் தமிழக்தில் தொடர் மழையைஎதிர்பார்க்கலாம்.
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு கனமழை
