• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோவையில் வெளுத்து வாங்கிய கன மழை..!

Byadmin

Nov 23, 2023

கோவையில் நேற்று நள்ளிரவு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியதால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவையில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையை அடுத்து கடந்த மூன்று தினங்களாகவே வெயிலின் தாக்கம் சற்றே அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில் இன்று இரவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போத்தனூர், கவுண்டபாளையம், வடவள்ளி, கோவைபுதூர், சாய்பாபா காலனி, துடியலூர், காந்திபுரம், குனியமுத்தூர், ராமநாதபுரம், பீளமேடு, ஆவாரம்பாளையம், சுந்தராபுரம் உட்பட அனைத்து பகுதிகளிலும் இரவு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
இடி, மின்னல், காற்று என எதுவும் இன்றி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதுடன் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.