• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வெயில் கொடுமை: மதுபோதையில் ஏடிஎம் மையத்தில் தூங்கிய ஆசாமி

Byவிஷா

May 2, 2024

புதுச்சேரியில் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், மதுபோதையில் இருந்த ஆசாமி ஒருவர் ஏடிஎம் மையத்திலேயே படுத்து தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரிக்கு வேலை தேடி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் மூலம் நாள் தோறும் பலர் வருகின்றனர். அதேபோன்று பல்வேறு வெளிமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் புதுச்சேரியில் பல்வேறு பணிகளையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் இருந்து ரயில் மூலம் புதுச்சேரிக்கு வேலை தேடி வந்த ஒருவர் வில்லியனூர் ரயில்வே நிலையத்தில் இறங்கி உள்ளார்.
அப்போது புதுச்சேரியில் கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசவே கையில் இருந்த காசுக்கு மது குடித்து விட்டு வந்த முதியவர் மது போதையில் வில்லியனூர் ரயில்வே நிலையம் அருகே உள்ள ஏடிஎம் அறைக்குள் சென்று ஏ.சி அறையில் படுத்து அயர்ந்து தூங்கிவிட்டார். அப்போது ஏடிஎம்மில் பணம் எடுக்க வந்தவர்கள் ஒருவர் ஏடிஎம் அறைக்குள் படுத்து தூங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள வில்லியனூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஏடிஎமின் ஏ.சி,அறையில், ஊரிலிருந்து எடுத்து வந்த பையை தலைக்கு சொகுசாக வைத்து கொண்டு முதியவர் படுத்து ஆசுவாசமாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரை தட்டி எழுப்பிய போலீசார் இது ஏடிஎம் மையம் இங்கே எல்லாம் படுத்து தூங்க கூடாது. உடனடியாக கிளம்புங்கள் என்று கூறியதுடன் அவரிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது அவர் கேரளாவில் இருந்து வேலை தேடி புதுச்சேரிக்கு வந்ததாகவும் வெயில் தாங்க முடியவில்லை. அதனால் ஏடிஎமின் ஏ.சி அறையில் படுத்து தூங்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இதனை அடுத்து அவரை அங்கிருந்து போலீசார் அனுப்பி வைத்தனர்.