• Mon. May 29th, 2023

இந்தியாவின் பல பகுதிகளை வெப்ப அலை தாக்கும்

ByA.Tamilselvan

Apr 11, 2023

அடுத்த 4 நாட்களுக்கு இந்தியாவின் பல பகுதிகளை வெப்ப அலை தாக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில். இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெப்ப அலை நிலவும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு இமயமலைப் பகுதியைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இந்த கடுமையான வெப்பநிலை நிலவும்.
வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே செல்லவும் என்றும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர்கள் வெயிலின்போது, வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் மோர், இளநீர் போன்ற குளிர்பானங்களை அதிகளவில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒடிசாவில் இரண்டு இடங்களில்- ஜார்சுகுடா மற்றும் பரிபாடாவில் முறையே 40.4 மற்றும் 40 டிகிரி அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *