• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார நிலையம் – கண்டுக்கொள்ளுமா அரசு

Byமதி

Sep 30, 2021

ராமநாதபுரத்தில் உள்ள தினைகுளம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தினைகுளம், முத்திவலசை, பஞ்சங்தாங்கி, மோங்கான் வலசை, வேதகரைவலசை, வேதலோடை, களிமண்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பொதுவாக இங்கு துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. இன்று வரை இந்த துணை சுகாதார நிலையத்தில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் கட்டடம் சேதம் அடைந்து மேற்கூரை பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்துவருகிறது.

இதனால் செவிலியர்கள் தங்கி பணியாற்ற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. செவிலியர்களால் இருக்கமுடியாத காரணத்தால் விஷக்கடி சிகிச்சைக்காக அங்கு சிகிச்சைக்கு வரும் மக்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்டோர் அவசர தேவைக்காக சிகிச்சை பெற வேண்டும் என்றால் 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ராமநாதபுரத்திற்கு செல்லவேண்டிய உள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். அவ்வப்போது கிராமத்திற்கு வரும் செவிலியர் தெருவோரங்களில் உள்ள மரத்தடியில் இருந்து கிராம மக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக கூறுகின்றனர்.

எனவே, இந்த துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் ஒன்றை கட்டித்தர பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.