ஆபத்து என்று தஞ்சம் புக வேண்டிய காவலர்கள் நம்மை காப்பாற்றுபவர்கள் என நம்பிக்கையில் இருந்தால் காவல் நிலையத்தை சூறையாடுகிறார்கள் காவல்துறை மீது குண்டல்களுக்கும் ரவுடிகளுக்கும் பயம் எங்கே போனது.
குற்றவாளிகள் செய்கிற குற்றங்களுக்கு சட்டசபையில் முதலமைச்சர் நியாயம் கற்பிக்கிறார் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுபக் குறைவினால் சட்டசபையில் குற்றவாளிக்கு ஆதரவாக இந்த அரசின் மீது குற்றம் வந்து விடக்கூடாது என்பதற்காக குற்றவாளிகளை ஆதரித்து பேசுகிற அந்தக் காரணத்தினால் காவல் நிலையம் தாக்கப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாட்டு காவல்துறையின் மானம் போய்விட்டது தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் காக்கிச்சட்டை காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறை சிங்கமாக அம்மாவின் கையில் இருந்த காவல்துறை எடப்பாடியார் கையில் இருந்த காவல்துறை இன்று அசிங்கமாக தலை குனிந்து நிற்கிறார்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு,

கழக நிரந்தர பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் 100 நாட்களில் 100 திருக்கோயிலில் 100 நாட்கள் சிறப்பு பிரார்த்தனையோடு கிராம அன்னதான திருவிழா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எஸ் பி நத்தம் கிராமத்தில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாபெரும் கிராம அன்னதானத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கி துவக்கி வைத்தார்.

கழக நிரந்தர பொது செயலாளர் ஐயா எடப்பாடியார் அவர்களின் தலைமையில் மீண்டும் அம்மா ஆட்சி மலர்ந்திட சிறப்பு பிரார்த்தனை மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை கிராம அன்னதான விழா மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவையின் சார்பில் இன்று திருமங்கலம் தொகுதி எஸ் பி நத்தம் கிராமத்தில் மாபெரும் கிராம அன்னதான விழா நிகழ்ச்சிக்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் தமிழழகன் தலைமை வகித்தார்.
கள்ளிக்குடி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் அன்னமுத்து முன்னிலை வகித்தார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சிவரக்கோட்டை ஆதிராஜா செய்திருந்தார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட அன்னதான திருவிழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அறுசுவை அன்னதானத்தை துவக்கி வைத்து வழங்கினார்.
இதில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல் சிவசுப்பிரமணியன் மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம் மாவட்ட அவை தலைவர் முருகன் மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் திருப்பதி மாவட்ட சார்பாக நிர்வாகிகள் சரவண பாண்டி உஷா சுந்தரம் சிவசக்தி சிங்கராஜ் பாண்டியன் துரைப்பாண்டி கபிகாசிமாயன் பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன் கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் பிரபு சங்கர் கண்ணன் ராமையா நிர்வாகிகள் சுகுமார் ரமேஷ் விஜி விவேக் உள்ளிட்ட மாநில மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு 100 நாள் கோவில்களில் சிறப்பு பூஜை முன்னிட்டு எஸ் பி நத்தம் அருள்மிகு வீர நல்லம்மாள் திருக்கோவிலில் மலர் தட்டுகளுடன் ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் கழக நிர்வாகிகளுக்கும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து சிறப்பு செய்தார்
இதனைத் தொடர்ந்து எஸ் பி நத்தம் பெருமாள்பட்டி பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு பொன்னாடை அணிவித்து விளையாட்டு உபகரணங்களை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் வழங்கினார். இதனைத் தொடர்ந்து திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்
அன்னதானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து வழங்கி சிறப்புரையாற்றிதாவது

ஆபத்து என்று தஞ்சம் புக வேண்டிய காவலர்கள் நம்மளை காப்பாற்றுவார்கள் என நம்பிக்கையில் இருந்தால் காவல் நிலையத்தில் சூறையாடுகிறார்கள் என்று சொன்னால் காவல்துறை மீது குண்டர்களுக்கும் ரவுடிகளுக்கும் பயம் எங்கே போனது எங்கே மறைந்து போனது ஏனென்றால் குற்றவாளிகள் செய்கிற குற்றங்களுக்கு சட்டசபையில் முதலமைச்சர் நியாயம் கற்பிக்கிறார் நியாயப்படுத்த முயற்சிக்கிறார்.
அதன் தொடர்ச்சி விபரீதம் தான் அனுபவம் குறைந்த மு க ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கின்ற அனுபவக் குறைவினால் சட்டசபையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இந்த அரசின் மீது குற்றம் வந்து விடக்கூடாது என்பதற்காக குற்றவாளிகளை ஆதரித்து பேசுகிற அந்த காரணத்தினால் காவல் நிலையம் தாக்கப்பட்டு இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் நேரடியாக சென்று சத்திரப்பட்டி மக்கள் உயிர் பயத்தில் இருக்கிறோம் எனக் கூறினர். நான்கரை ஆண்டு காலம் காவல்துறையை கையில் வைத்திருந்த ஸ்காட்லாந்துக்கு நிகராக காவல்துறையாக புரட்சித்தமிழர் எடப்பாடியார் வழி நடத்திக் காட்டினார்.
அவருடைய கவனத்தில் கொண்டு சென்ற பின் அதிமுக சார்பில் ஆறுதல் கூறி பாதிக்கப்பட்ட காவலருக்கு ஆறுதல் கூறி காவல் நிலையத்தை நேரடியாக பார்வையிட்டு என்ன நிலவரம் என சொல்லுங்கள் என கூறினார். எடப்பாடியார் ஆணைக்கிணங்க நேரில் சென்று பார்க்க சென்றபோது ஒட்டுமொத்த போலீஸ் படை காவல் நிலையத்தை சூறையாடியவரை பிடிக்க முடியவில்லை. பார்வையிட சென்ற எங்களைப் பிடித்து கைது செய்து கல்யாண மண்டபத்தில் அடைத்து வைத்து ஆறு மணிக்கு தான் விடுவித்தார்கள்.
தமிழ்நாட்டு காவல்துறையின் மானம் போய்விட்டது. தடியெடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் காக்கிச்சட்டை காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான காவல்துறை சிங்கமாக அம்மாவின் கையில் இருந்த காவல்துறை எடப்பாடியார் கையில் இருந்த சிங்கம் என இருந்த காவல்துறை இன்று அசிங்கமாக தலை குனிந்து நிற்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கெல்லாம் ஒரே தீர்வு சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால் மீண்டும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் அம்மா ஆட்சி மலர வேண்டும் என சிறப்பு உரையாற்றினார்.