முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு செல்ல டிடிவி .தினகரன் தான் காரணம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.
டிடிவி.தினகரன் விவேகானந்தரை போன்று தங்களுக்கு அறிவுரைகளை சொல்லி வருவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சாடியுள்ளார். அவரை நம்பி சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்களின் நிலைமை என்ன என்றும் கேள்வி எழுப்பி அவர் , முன்னாள் முதல்வர் சிறைக்கு செல்ல முழு காரணமும் டிடிவி .தினகரன் தான் என குற்றம்சாட்டினார். மிகப்பெரிய ஆளுமை இல்லாத போதும் கட்சியை இபிஎஸ் காப்பாற்றியுள்ளார் என பெருமிதம் தெரிவித்தார்.