• Fri. Apr 26th, 2024

அவரு தான் என் புருஷன் : மனம் திறக்கிறார் மலேசிய மஞ்சு

நான் பனங்காட்டு படை கட்சியில் குறுக்கிடுவது கிடையாது. வீட்டுக்கு வந்தால் என்னுடைய கணவராக வருவார். இது ஒரு சாதி கட்சி. அதில் நான் தலையிடுவதும் கிடையாது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு கட்சி தலைமையிடம் பேசினேன். ஆனால், அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை.

எட்டு மாதங்களாக சிறையில் இருக்கும் பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடாரை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்கு அக்கட்சி முயற்சி எடுக்கவில்லை என்று ஹரி நாடரின் மனைவி என்று கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு.
தமிழ்நாட்டில் நடமாடும் நகைக்கடை என வர்ணிக்கப்படுபவர் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 44 தொகுதிகளில் தன்னுடைய கட்சி சார்பில் வேட்பாளர்களை, செலவுகளை அள்ளி செய்தார். தேர்தல் முடிந்த பிறகு பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூரு சிறைச்சாலையில் 8 மாதங்களாக இருந்து வருகிறார். அவரை ஜாமினில் வெளியே கொண்டு வருவதற்காக போராடி வருகிறேன் என்று கூறியிருக்கிறார் ஹரி நாடாரின் மனைவி என்றுக்கூறிக்கொள்ளும் மலேசியாவைச் சேர்ந்த தொழிலபதிபர் மஞ்சு என்ற பெண். இதுதொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “இப்போ நான் பேசுவதற்குக் காரணம் ஹரி நாடார்தான். எனக்கும் ஹரி நாடாருக்கும் சட்டப்படி திருமணம் ஆகவில்லை. ஆனால் எங்களுக்கு குழந்தை இருக்கிறது. சிறையிலிருந்து அவர் வெளியே வந்த பிறகு முதல் மனைவியை (ஷாலினி) விவகாரத்து செய்ய வேண்டும் என்றுதான் இருக்கிறார். விரைவில் எனக்கும் அவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இங்கு நான் மனைவி என்று என்னை குறிப்பிட காரணம், எங்களுக்குக் குழந்தை இருக்கிறது. நீதிமன்றத்திலேயெ என்னை மனைவி என்று ஹரி நாடார் சொல்லியிருக்கிறார். நீதிமன்றத்தில்கூட அவருடைய மனைவி என்று என்னைத்தான் கையெழுத்திட அழைத்தார்கள். ஹரி நாடாரின் வாழ்க்கையில் நான் இருக்கிறேன். அது எல்லோருக்கும் தெரியும்..

நான் பனங்காட்டு படை கட்சியில் குறுக்கிடுவது கிடையாது. வீட்டுக்கு வந்தால் என்னுடைய கணவராக வருவார். இது ஒரு சாதி கட்சி. அதில் நான் தலையிடுவதும் கிடையாது. அவர் கைது செய்யப்பட்ட விவகாரத்துக்குப் பிறகு கட்சி தலைமையிடம் பேசினேன். ஆனால், அவர்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. கட்சியில் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் மலேசியாவிலிருந்து வந்து ஒரு பெண் என்றுகூட எனக்கு உதவவில்லை. பிறகு நானும் யாரிடமும் உதவி கேட்கவில்லை. நாங்கள் தலைமறைவாகவில்லை. தேர்தல் முடிந்த பிறகு கேரளாவில்தான் இருந்தோம். ஜாமினுக்காகக் காத்திருந்தோம். ஆனால், கிடைக்கவில்லை. அதன்பிறகு கேரள ரிசார்ட்டில் இருந்தபோதுதான் போலீஸ் வந்து கைது செய்தார்கள். என்னையும் கூடவே கைது செய்தார்கள். பெங்களூருவுக்கு அழைத்து சென்றபோதும், என்னைதான் மனைவி என்று போலீஸிடம் சொன்னார். பிசினஸுக்கு கடன் வாங்கியது தொடர்பாகத்தான் கைது செய்யப்பட்டார். மோசடி வழக்கு என்று சொன்னாலும் அதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இது எனக்கு உண்மையிலேயே சோகமான நேரம். பெங்களூரு சிறையில் 8 மாதங்களாக இருக்கிறார். ஜாமினுக்காக போராடிகொண்டிருக்கிறோம். எமஷோனலா நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். கணவரைப் பற்றி மனைவிக்குத்தான் தெரியும். சிறைக்கு சென்றதிலிருந்து மிரட்டல்கள் வருகின்றன. எங்களுக்கு எந்த ஒத்துவைப்பும் உதவியும் இல்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் அவரை வெளியே கொண்டு வந்து ஒரு நல்ல மனிதராக காட்டுவேன். ஹரி நாடார் வெளியே இருந்தவரை ஷாலினி எந்தப் புகாரும் கொடுக்கவில்லை. ஹரி நாடார் என்கூடத்தான் இருக்கிறார் என்று அவருக்குத் தெரியும். அப்போது புகார் கொடுத்திருக்கலாமே. ஹரி நாடார் மீது பிறகு ஏன் புகார் கொடுக்கணும். அரெஸ்ட் பண்ணனும் ஏன் சொல்லணும்? எஸ்.பி. வரைக்கும் ஏன் போகணும், சோஷியல் மீடியாவில் என் தவறாக எழுதணும்? ஹரி நாடார் வெளியே இருந்தபோது அவரிடமே தைரியமாகப் பேசியிருக்கலாமே. தன்னை ஓர் அனாதைன்னு சொல்லிதான் ஹரி நாடாரை திருமணம் செய்தார். ஆனால், பிறகு அவர் அனாதை இல்லைன்னு தெரிய வருகிறது. அது ஒரு பெரிய கேள்விக்குறி. நான் இப்போது இந்த இடத்தில் பேசுகிறேன் என்றால் என்னிடம் நேர்மை இருக்கிறது.” என்று மஞ்சு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *