தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு அவருக்கு பிரதமர் மோடி உட்பட பல அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திமுக கட்சியினர், தொண்டர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்று காலை முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் உள்ளிட்டவர்கள் நினைவிடங்களிலும் பெரியார் திடலில் பெரியார் நினைவிடத்திலும் நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.
இந்நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், இன்று பிறந்த நாள் காணும் இனிய நண்பர் மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.