• Fri. Jun 2nd, 2023

உடனே வெளியேறுங்கள்..! இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்..

Byகாயத்ரி

Mar 1, 2022

உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனில் உள்ள பல இந்தியர்கள் சொந்த ஊர் திரும்பும் நிலை கடும் சவாலாக உள்ளது. மத்திய அரசு அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாணவர்களின் உக்ரைன் எல்லையை கடந்து ருமேனியா போன்ற அண்டை நாடுகளுக்கு வந்தாக வேண்டும். இந்தப் பயணம் அவர்களுக்கு எளிதல்ல. இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்விலிருந்து இந்தியர்கள் உடனடியாக வெளியேறும் படி உக்ரைனில் இருக்கும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ரயில் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நகரிலிருந்து எப்படியாவது இன்றே வெளியேறும்படி வலியுறுத்தியுள்ளது. ரஷ்யா, உக்ரேன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாத காரணத்தினால் ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *