• Sun. Jul 20th, 2025
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM
WhatsApp Image 2025-07-12 at 10.04.57 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.56 PM (1)
WhatsApp Image 2025-07-12 at 10.04.58 PM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM
WhatsApp Image 2025-07-11 at 8.58.31 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.29 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.27 AM (2)
WhatsApp Image 2025-07-11 at 8.58.28 AM (1)
WhatsApp Image 2025-07-11 at 8.58.30 AM (1)
previous arrow
next arrow

ராகுல்காந்தியை விமர்சித்த எச்.ராஜா…

Byகாயத்ரி

Mar 12, 2022

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதற்காக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தொண்டர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். அப்போது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது, உத்திரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் கடந்த 35 ஆண்டுகளாக எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை. அந்த சாதனையை தற்போது பாஜக செய்துள்ளது. எதிரிகளின் சதி திட்டத்தை எல்லாம் தவிடுபொடியாக்கி பாஜக உத்திரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி பாஜக என பொய் பிரச்சாரம் செய்து வந்த ராகுல் காந்தியின் முகத்தில் முஸ்லிம் இன மக்கள் கரியைப் பூசி விட்டனர். மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நடந்த இந்த தேர்தலில் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதுவே சாதாரண காலத்தில் நடந்திருந்தால் எதிர்க்கட்சிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். தூங்கிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் எச்சரிக்கை மணி அடித்து உள்ளனர். எதிர்காலத்தில் காங்கிரஸ் என்ற ஒன்று இருக்க வேண்டும் என நினைத்தால் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய 3 பேரையும் அந்த கட்சியில் இருந்து ஒழித்துக்கட்ட வேண்டும். 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பின்னர் மேற்கு வங்காளத்தின் மம்தா பானர்ஜி காங்கிரசுடன் கூட்டணி வைக்க உள்ளதாக அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் எத்தனை கூட்டணி அமைத்தாலும் சரி பாஜகவை இவர்களால் அசைக்கக்கூட முடியாது. இந்தியா முழுவதும் பாஜக அலை வீசுகிறது. மக்களுக்கு யார் நல்லது செய்வார்கள்.? யார் உண்மையான மக்கள் தலைவர்.? என்பதை இந்திய மக்கள் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர்.