• Sat. Apr 20th, 2024

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குட்கா பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குட்கா பறிமுதல்
காங்கேஷ்குமார்
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீமதுரை புலம்பட்டி பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பான்குட்கா விற்பனைக்காக பதிக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து போதை பொருட்களின் விற்பனை திருட்டுத்தனமாக நடைபெற்ற வருகிறது. . இந்நிலையில் மில் கூடலூர் ஸ்ரீமதுரை அடுத்துள்ள புலம்பட்டி பகுதியில் வசித்து வரும் முருகானந்தம் த.பெ.ஆறுமுகம் இவர் ஸ்ரீமதுரை புலம்பட்டியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார் அங்கு அவர் பான்,குட்கா கூல்லிப் போன்ற போதை பொருட்களை மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார் இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து கூடலூர் காவல் கண்கானிப்பாளர் மகேஷ்குமார் பார்வைக்கு கொண்டு செல்ல ப்பட்டு பின்பு கூடலூர் ஆய்வாளர் வெள்ளதங்கம்,குற்ற தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இப்ராஹீம் ,காவலர் முத்துகுமார் அசோக்குமார் ,இன்ஸ்பெக்டர் அருள் .ராமேஸ்வரம். போன்றோர் கூட்டு முயற்சியில் முருகானந்தத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்பு அவரிடம் விசாரனை மேற்கொள்ளும் போது இந்த பொருட்களை கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து விற்கப்படுவதாக கூறினார். இவரிடமிருந்து 42.கிலோ பான்குட்கா கூலிப் போன்றவை பறி முதல் செய்யப்பட்டது .பறிமுதல் செய்யப்பட மூட்டையில் இருந்து 2025.பான்குட்கவும்.425.கூலீப்பும் இருந்தன , மொத்தமாக .2450. பாக்கேட்டுகள் இருந்தன.
.இந்த பொருட்கள் கர்நாடகாவில் இதன் விலை 22150.ரூபாய் . தமிழ் நாட்டில் இதன் விலை 1.22.500.ரூபாய் என தெரிய வருகிறது. இந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு முருகானந்த்தை கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கூடலூர் கண்கானிப்பாளர் மகேஷ்குமார் கூறுகையில் கூடலூர் பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு கடைகளிலும் ஆய்வு மேற்கொ ள்கிறோம். எங்களுடைய குழுக்கள் பல்வேறு பகுதிகளிலும் சென்று ஆய்வு செய்வதோடு குற்றங்களையும் தடுத்து வருகிறோம். பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *