• Thu. Feb 13th, 2025

நூதனமுறையில் குட்கா கடத்தல்… பொறிவைத்து பிடித்த போலீஸ்!…

By

Aug 17, 2021

மதுரையில் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா பொருட்களை கொரியர் மூலம் கடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரையில் தனியார் கொரியர் சேவை மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடத்திய எஸ்.எஸ்.காலனி போலீசார் கொரியரில் வந்த முகவரியை ஆய்வு செய்ததில் நெல்லை மாவட்டத்திலிருந்து மதுரைக்கு தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை சென்ற காவல்துறை கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன், திசையன்விளையை சேர்ந்த பாண்டியராஜன், வாழகுரு மற்றும் மதுரையை சேர்ந்த ரோஷன் ஆகிய 4 பேரை கைது செய்தனர், அத்துடன் அவர்கள் வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த 960 கிலோ போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.