மதுரையில் உள்ளJCI அமைப்புகள் இன்று காலை தெப்பக்குளம் பகுதியில், வரவிருக்கும் தேர்தல்களை முன்னிட்டு குடிமக்கள் வாக்களிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான பேரணியை வெற்றிகரமாக நடத்தியது.

இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராக JFS PDM M. K. கார்த்திகேயன் (முன்னாள் தேசிய தலைவர், JCI India) அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக JCI Sen. N. மணிவண்ணன் (Zone 29 மண்டல தலைவர்) அவர்கள் கலந்துகொண்டு பேரணியை சிறப்பித்தனர்.
மதுரையில் உள்ள அனைத்து JCI கிளை இயக்க தலைவர்கள் , JAC நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் உற்சாகமாக பங்கேற்றனர்

இந்த பேரணியின் முக்கிய நோக்கம், பொதுமக்களிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதைக் கூறுவதாகும். “உங்கள் வாக்கு – உங்கள் குரல்” என்ற வாசகத்துடன் இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது .
“வாக்கு செலுத்துவது உங்கள் உரிமை மட்டுமல்ல, அது உங்கள் கடமையும் ஆகும்” என்பதைக் கருத்தில் கொண்டு, அனைவரும் தேர்தலில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.



