• Fri. Apr 18th, 2025

நடுக்கடலில் முற்றிய மோதல்.. 5வது நாளாக தொடர் போராட்டம்!…

By

Aug 18, 2021

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரு கிராமங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு தரப்பு மீனவர்கள் 5வது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.

சீர்காழி அடுத்த பாலையாறு முதல் தரங்கம்பாடி வரை 26 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. அங்கு ஒருதரப்பு மீன்வர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலைவில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அதனை எதிர்த்து மற்றொரு தரப்பினர் கடலில் படகுகளுடன் சென்று உள்ளனர்.

இதனை அடுத்து ஏற்பட்ட மோதலில் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டதால் 4 மாவட்டத்தை சேர்ந்த 300 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.