• Fri. Apr 19th, 2024

எஸ்.கே படம் குறித்த அட்டகாசமான அப்டேட்?!?

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால், பல படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

மேலும் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 என்ற படத்தில் நடிக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகவுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.

இதன் படப்பிடிப்பு காரைக்குடியில் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நடிகையான மரியா ரியாபோஷாப்கா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர் 2018-ஆம் ஆண்டு வெளிவந்த ‘எடெர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான ‘ஸ்பெஷல் ஆப்ஸ்’ என்ற இந்தி வெப் தொடரிலும் நடித்துள்ளார். இது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *