
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து அதிக ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவர். மேலும் அவரது கைவசம் தற்போது ஏராளமான திரைப்படங்கள் உள்ளன.
இந்நிலையில் நடிகை நயன்தாரா ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் நடித்தபோது அதன் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஏறக்குறைய 8 ஆண்டுகளாக சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.
இருவரும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருப்பது அனைவரும் அறிந்ததே! காதலர் தினமான இன்று நயன்தாரா, தனது காதலன் விக்னேஷ் சிவனுக்கு காதல் பரிசாக பூ கொத்து கொடுத்து காதலை வெளிப்படுத்தும் வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.