அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 169’! இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார் என்று பிப்ரவரி 10-ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை யார் இயக்குவது என்பது குறித்து கடந்த மூன்று மாதங்களாக பல போராட்டத்திற்கு பிறகு, சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதனை தீர்மானித்துள்ளது. இந்த அறிவிப்பு ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். தலைவர் ‘169’ நெல்சனும், அனிருத்தும் தொடர்ச்சியாக இணைந்து பணியாற்றும் நான்காவது படம் இதுவாகும். மேலும், இது ரஜினிகாந்த் மற்றும் அனிருத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது, ரஜினியின் ‘தலைவர் 169’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும், சிம்புவும் இணையவுள்ளனர் என்று கோலிவுட்டில் ஒரு புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் சன் பிக்சர்ஸ் இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஒரு வேலை இந்த படத்தில், சிவகார்த்திகேயனும் – சிம்புவும் இணைந்தார்கள் என்றால் சிவகார்த்திகேயன் கெஸ்ட் ரோலிலும் சிம்பு ஒரு பாடலில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.