• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

புதிய மாவட்ட செயலாளர் ராஜாவிற்கு பிரமாண்ட வரவேற்பு
அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

Byஜெபராஜ்

Nov 4, 2022

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா புளியங்குடிக்கு வருகை தந்தார். அவருக்கு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
தென்காசி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் பட்டியல் தலைமை கழகத்தின் மூலமாக நேற்று வெளியானது. இதில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து நேற்று மதியம் புளியங்குடிக்கு வருகை தந்தார் அவருக்கு டிஎன் புதுக்குடி காமராஜர் சிலை அருகில் மேள தாளங்கள் முழங்க பிரமாண்டமான வரவேற்பு நகர திமுக செயலாளர் அந்தோணிசாமி தலைமையில் கொடுக்கப்பட்டது பின் காமராஜர் சிலை, காந்தி சிலை, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாவட்ட செயலாளர் ராஜா மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்சியில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ சதன் திருமலை குமார்,புளியங்குடி நகர் மன்ற தலைவி விஜயா சவுந்திர பாண்டியன்,சிவகிரி பேரூர் கழக செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்,ராயகிரி செயலாளர் குருசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் பத்திரம் சாகுல் ஹமீது, வேல்சாமி பாண்டியன், துணை செயலாளர்கள் காந்திமதியம்மாள், கருப்பசாமி, கவுன்சிலர்கள் பொன்னு துரைச்சி, கார்த்திக் உமாமகேஷ்வரி, ராஜேஸ்வரி,வள்ளி, மாவட்ட பிரதிநிதி சுரேஷ், பெருமாள், அருணாசலம்,பொருளாளர் காஜா மைதீன், நகர காங்கிரஸ் கட்சி தலைவர் பால்ராஜ், மதிமுக, பொதுக்குழு உறுப்பினர் அலாவுதீன், நகர செயலாளர் ஜாகிர் உசேன், நிர்வாகிகள் சங்கர், தரணி முருகன், ராமலிங்கம், சிபிஐ ஒன்றிய செயலாளர் வேலு , விசிக நகர தலைவர் சுரேஷ்,சமக கவுன்சிலர் அருணாதேவி,முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் செய்யது இப்ராஹீம், துணை செயலாளர் அப்துல் வஹாப், மாநில துணை தலைவர் செய்யது பட்டாணி, நகர் மன்ற உறுப்பினர் சேக்காதர் மைதீன், மற்றும் திமுக நிர்வாகிகள் முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கட்ராமன், தம்பிதுரை, குரூராஜ், விக்ரம், மணிகண்டன், மைதீன், அருணாசலம், அய்யனார், சுப்பு, குழந்தை ராஜ், சேதுராமன் மீனாட்சி சுந்தரம், மணிமாறன், உட்பட ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்