• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

கோவையில் பிரம்மாண்டமாக “ராக சங்கமம்” இசை நிகழ்ச்சி..,

BySeenu

Jun 21, 2026

கோவை மாவட்ட இசை கலைஞர்கள் நலச் சங்கத்தின் சார்பில், இசை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக “ராக சங்கமம்” என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் வரும் ஜூலை 25 ஆம் தேதி நடைபெற உள்ள இதில் பிரபல பாடகர் உன்னி கிருஷ்ணன் பங்கேற்க உள்ளார்..

இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது..

இதில், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கண்ணன், ராக சங்கமம் அமைப்பின் துணை செயலாளர் ஆனந்த், கோவை மாவட்ட இசை கலைஞர்கள் சங்க தலைவர் சாமுவேல் ராஜன், பொருளாளர் வெற்றிவேல்,உள்ளிட்டோர் பேசினர்..

“இசையால் இணைவோம், இசை கலைஞர்கள் வாழ்வினை காப்போம்” என்ற உன்னத நோக்கத்தோடு, நலிவடைந்த இசை கலைஞர்களின் நலனுக்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், இதில், பிரபல பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் பிரபல தொலைக்காட்சிகளின் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முன்னனி இளம் பாடகர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தனர்..

குறிப்பாக இந்த நிகழ்ச்சியை கோவை மாவட்ட இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைத்து நடத்த இருப்பதாகவும்,கோவையில் உள்ள இசை பிரியர்களுக்கு ஜூலை 25 ஆம் தேதி மாலை ஒரு மறக்க முடியாத இசை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என நம்பிக்கை தெரிவித்தனர்…