• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவையில் வேளாண் கல்லூரி மாணவர்களுடன் யோகா செய்த  ஆளுநர்..,

BySeenu

Jun 21, 2026

கோவையில் 1,500 வேளாண் கல்லூரி மாணவ – மாணவிகளுடன் யோகா செய்த  ஆளுநர் – உலக யோகா தினத்தை ஒட்டி பிரம்மாண்டமாக நடந்தது !!!

உலக யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் உலக யோகா தின நிகழ்ச்சி நடந்தது. 

 இதில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் மாணவ – மாணவிகளுடன் யோகா நிகழ்வில் கலந்து கொண்டார் . இதில் 1,500 வேளாண் பல்கலைக் கழக மாணவ – மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரியில் இருந்து வந்த 50 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். 

அப்போது கவர்னர் பல்வேறு வகையான யோகா பயிற்சிகளையும் மாணவ – மாணவிகளுடன் இணைந்து செய்தார். முன்னதாக பிரதமர் மோடி பேசிய யோகா தின சிறப்புரை நேரலையில் ஒளிபரப்பப்பட்டதை கவர்னர் மாணவியர் – மாணவிகளுடன் பார்த்தார்.

அதன் பிறகு பல்கலைக் கழக வளாகத்தில் மகிழும்பு மரக்கன்று நட்டார்.  பின்னர் மாணவ – மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில்  உரையாடினார். இதில் வேளாண் பல்கலைக் கழக. முனைவர் நா வெங்கடேச பழனிச்சாமி  தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் கா சுப்ரமணியம்( பொறுப்பு )

கவர்னரின் செயலாளர் சஜன்சிங்  மாணவர் நலத்துறை. முனைவர் பாலசுப்பிரமணியம் மற்றும் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.