புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா வம்பன் 4 ரோட்டில் இருந்து கொத்தக்கோட்டை ஊராட்சிக்கு செல்லும் தார்சாலை குண்டும் குழியுமாக உள்ள தார்சாலையை மறு சீரமைப்பு செய்துதரக் கோரி ஐந்தாண்டுகளாக போராடும் கிராம மக்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மைச்செயலாளர்
தர்மேந்திர பிரதாப் யாதவ் தலையிட்டு உதவிட வேண்டுமென ஊர் பொதுமக்கள் வேண்டுகோள்.

வம்பன் 4 ரோட்டில் இருந்து கொத்தக்கோட்டை ஊராட்சி செல்லும் தார்சாலையை அக்கிராம மக்கள் அதிகம் பயன்படும் ஒர் முக்கிய சாலையாக இருந்து வருகிறது.குண்டும்,குழியுமாக உள்ள இச்சாலையில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் செல்வோர் மட்டுமன்றி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்லும் அவல நிலை உள்ளது.
மேலும் வேறு ஏதேனும் பெரும் விபத்துகள் நிகழும் முன்பு இந்த தார்சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று இக்கிராம மக்கள் துறை சார்ந்த அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கையை முன்வைத்தும் எவ்வித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாக தலையிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு முதன்மைச்செயலாளர்
தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., அவர்கள் மூலமாக ஐந்தாண்டுகளமாக சீரமைக்கப்படாத தார்சாலை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உள்ளர்.

மேலும் இதுகுறித்து பேசிய ஊர் பொதுமக்கள் கடந்த ஆட்சி காலத்தில் பலமுறை மனு கொடுத்தும்,முன்னாள் அமைச்சரும், தற்போதைய ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடம் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதியும் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட இயக்குநர் அவர்களிடமும் கோரிக்கையை முன்வைத்தும் இதனால் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் நேரடியாக தலையிட்டு பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ,மாணவிகள், பொதுமக்கள் நலன் கருதி சாலையை விரைந்து சரி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.


