என்ன பிரஷர் வந்ததோ… நாங்கள் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார் – உதயநிதி காரசாரமாக பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார்.

முதலமைச்சர் பேசி முடித்ததும் நாங்கள் பேச வாய்ப்பு கேட்டோம். முதலில் தருவதாக சொன்னார். பிறகு என்ன பிரஷர் வந்ததோ… முதலமைச்சர் முடிவா, இல்லை அமைச்சர்கள் யாரேனும் சொன்னார்களா என்று தெரியவில்லை.
திடீரென்று சபாநாயகர் நாங்கள் பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார் என வெளிநடப்பு செய்த பின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.








