• Wed. Mar 19th, 2025

சேது பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!

Byகுமார்

Sep 15, 2023

மதுரை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்புவிழா நடைபெற்றது கல்லூரி தலைவர் மற்றும் நிறுவனர் எஸ் முகமது ஜலீல் அவர்கள் தலைமை வகுத்தார் கல்லூரி நிர்வாக அதிகாரிகள் சீனிமுகைதீன், சீனிமுகமது அலியார் மறைக்காயர், நிலோஃபர் பாத்திமா, நாசியாபாத்திமா, முன்னிலை வகுத்தனர். சிறப்பு விருந்தினராக பிரீத்தாபிரபாகர் ,டாக்டர் கே ராமலிங்கம் ,மீனாட்சி சென்னை குரூப் லீடர் 5ஜி லேப்ஸ் ஏசியா பசிபிக் நோக்கியா நெட்வொர்க் ஆகிேயோர் கலந்துகொண்டு பட்டமளிப்புரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர். ப்ரீத்தா பிரபாகர் அவர்கள் பேசுகையில் அப்துல் கலாம் ,சர்ச்சில் அவர்களின் பொன்மொழிகளை மாணவர்கள் கடைப்பிடித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று பேசினார் .ராமலிங்கம் அவர்கள் பேசுகையில் மாணவர்கள் நாட்டிற்கு ஒரு சிறந்த குடிமகனாக விளங்க வேண்டும் என்றும் கஷ்டம் இல்லாத வாழ்க்கையை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஆசிரியர்களுடனும் என்றும் தொடர்புடன் இருக்க வேண்டும் என்று பேசினார் .மீனாட்சி அவர்கள் பேசுவதில் பொறியியல் படிப்பு படித்து வேலையில் ஈடுபடும் போது தான் பொறியியல் படிப்புக்கான தன்மை விளங்கும் என்றும் வேலைக்கு சென்றாலும் புதிய தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று பேசினார் .
2015 -19 ஆண்டுக்கு ஆண்டுகளில் 1039 மாணவர்கள் பட்டம் பெற்றனர் கல்லூரி முதல்வர் செந்தில்குமார் அறிக்கை சமர்ப்பித்தார். துணை முதல்வர் சிவகுமார் நன்றி உரை வழங்கினார் நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாட்டை கல்லூரி முதல்வர் தலைமையில் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.