• Wed. May 22nd, 2024

வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன், நேரில் ஆய்வு…

ByG.Ranjan

Apr 30, 2024

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் (29.04.2024) அன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி, நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் கரிசல்குளம் ஊராட்சி தச்சனேந்தல் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6 இலட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு வருவதையும், உலுத்திமடை ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5.57 கோடி மதிப்பில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலத்தினையும், அழகாபுரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.3.50 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புரணமைக்கப்பட்டு வரும் பணிகளையும், அழகாபுரி ஊராட்சி சிறுவனூர் கிராமத்தில் அயோத்தி தாஸ் பண்டிதர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 இலட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டு வருவதையும், புல்வாய்கரை ஊராட்சியில் கனிமவள நிதியிலிருந்து ரூ.13.37 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருவதையும், நாலூர் கிராமத்தில் 15 வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.39.68 இலட்சம் மதிப்பில் புதிய துணை சுகாதார மையம் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

மேலும் நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அறிவுத்தினார். மேலும், கட்டனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெறும் உள்நோயாளிகள், மகப்பேறுக்காக அனுமதிக்கப்பட்ட தாய்மார்கள் மற்றும் புற நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள், சிகிச்சை முறைகள் உள்ளிட்டவைகளின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *