திண்டுக்கல் ஜி டி என் கல்லூரியில் 58 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் ஜி டி என் கல்வி குழுமத்தின் 58வது பட்டமளிப்பு விழா கல்லூரி உள் அரங்கத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நீதி அரசர் சுரேஷ் குமார் முன்னாள் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரன் ஐஏஎஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சிகள் 1400 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் லயன் கே ரெத்தினம் தலைமையேற்று சிறப்பு செய்தார். மேலும் இந்த நிகழ்வில் சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.




