

கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை தலைவர் பேராசிரியர் சிவசங்கரன் என்பவரை மாணவர்கள் பலர் சேர்ந்து கல்லூரியில் வைத்து அடித்து உதைத்து இருக்கின்ற சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தையே பரபரப்பாக்கி இருக்கின்றது.
கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனின் காதல் விவகாரம் குறித்து அவரது பெற்றோரிடம் தெரிவித்தற்காக மாணவர்கள் பலர் சேர்ந்து தாக்குதல்
நடத்தி இருக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த பேராசிரியர் பலத்த காயத்தோடு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கல்லூரியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் மாணவர்களுக்கு சாதகமாக அழித்து விட்டதாக பேராசிரியர் குற்றஞ்சாட்டியுள்ளார், இதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து,
2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்து இருக்கின்றார்.
