• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

ByA.Tamilselvan

Aug 6, 2022

டெல்லியில் இன்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறை பயணமாக நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று காலை அவர் டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் புதிய ஜனாதிபதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இன்று பிற்பகல் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பின்னர் இன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார்.