கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 4-ம் ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைதொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணியும் தொடங்கியது. இந்த பேரணியில் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும், பாராளுமன்ற உறுப்பினர்களாக கனிமொழி, தயாநிதி மாறன் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திமுக தொண்டர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்துக் கொண்டு அமைதி பேரணியில் பங்கேற்றனர். ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிய அமைதி பேரணி மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து, மெரினாவில் உள்ள கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
