• Sat. Apr 26th, 2025

கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்த ஆளுநர் ஆர்.என்.ரவி

ByG.Suresh

Apr 12, 2025

சிவகங்கை அருகே நாட்டரசன் கோட்டையில் நடைபெற்ற கம்பர் விழாவில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கலந்து கொண்டு கம்பராமாயண இசை பாடலை கேட்டு ரசித்தார்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில், கம்பன் கழகங்களின் ஒருங்கிணைப்பு நிர்வாகக் குழு சார்பில், பங்குனி அத்தத் திருநாளை முன்னிட்டு, கம்பர் நினைவிடத்தில் அமைந்துள்ள, கம்பன் அருட்கோயிலில், நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டார்.

முன்னதாக கோயில் வளாகத்தில் சுவாமி தரிசனம் செய்த பின்னர். புதுக்கோட்டை கம்பன் கழக தலைவர் பாரதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இசை ஆசிரியை சுவுமியா இசை குழுவினரின் கம்ப ராமயண பாடல்களை சுமார் அரை மணி நேரம் ரசித்து கேட்டார்.

பின்னர் பாடங்களை நேர்த்தியாக பாடிய இசை குழவினருக்கு பாராட்டு தெரிவித்ததுடன், புகைப்படமும் எடுத்துக் கொண்டார். முக்கிய பிரமுகர்களை சந்தித்த பின்னர் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.