• Mon. Apr 28th, 2025

மஞ்சுவிரட்டு போட்டி முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கம்..,

ByG.Suresh

Apr 13, 2025

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தேவதாஸ், ஏற்பாட்டில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக பாகனேரி கிளைக்கழகம் மற்றும் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தேவதாஸ், ஏற்பாட்டில் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.பின்னர் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர் களுக்கும் பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளர்கள் அருள்ஸ்டீபன்,சேவியர்தாஸ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், தகவல் தொழில்நுட்ப மண்டல துணைத் தலைவர் வெண்ணிலா சசிக்குமார், அமைப்பு சாரஅணி மாவட்ட செயலாளர் சரவணன், அம்மா பேரவை துணை செயலாளர் அழகர்பாண்டி, பழனியப்பன், உடையப்பன்,காளைலிங்கம்,ராமநாதன்,அண்ணாதுரை,பாண்டி,முத்தையா,இராஜேந்திரன், ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் கிருஷ்ணகுமார்,தாமு, உள்ளிட்ட ஏராளமான ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.