சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பூங்காவனம் பகுதியில் வசித்து வருபவர் தண்டிலிங்கம் வயது30 இவர் மானாமதுரை அருகே உள்ள வெள்ளி குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக கணினி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
திருப்புவனத்தில் இருந்து பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது செல்லப்பனேந்தல் கிராமத்தின் அருகே எதிரே வந்த தனியார் பேருந்தும் இவர் சென்ற இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் உயிரிழந்தார்.
மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆசிரியர் உயிரிழந்தத சம்பவம் இவருடன் பணியாற்றிய சக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆழ்ந்த துக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.மேலும் இதுகுறித்து திருப்புவனம் தாலுகா காவல் துறையினர் தனியார் பேருந்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.