மறைந்த கன்னட பவர்ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து, அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த புனித் ராஜ்குமாரின் கண்கள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கண்டீரவா ஸ்டேடியத்தில் திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
மேலும் அவரது மகள் அமெரிக்காவில் இருந்து நேற்று வந்தார். இந்நிலையில் இன்று சடங்குகளுக்காக, புனித் ராஜ்குமாரின் உடல் அலங்கார ஊர்தியில் கொண்டு வரப்பட்டிருந்தது. தனது தந்தை, தாய் அடக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ கனடிர்வா ஸ்டுடியோ அருகேயே நடிகர் புனித்தின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகள் அரசு மரியாதையுடன் நடைபெற்றது.