நடிகர் ரஜினிகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் அனுமதிக்கப்பட்டார்.
ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரத்த ஓட்டத்தை சீரமைப்பதற்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவர் வேகமாக குணமடைந்து வருகிறார் என்றும் ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.
இதையடுத்து ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்கள். இந்நிலையில், புதுச்சேரியில் நடிகர் ரஜினிகாந்த் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரஜினி ரசிகர்கள் தீச்சட்டி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.