• Wed. Dec 11th, 2024

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு

Byமதி

Nov 1, 2021

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் “04.11.2021 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணியாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விழாவினை மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக 05.11.2021 வெள்ளிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பலதரப்பினரிடம் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.

எனவே தீபாவளிக்கு அடுத்த நாளான 05.11.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும் அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 20.11.2021 அன்று பணி நாளாக அறிவித்தும் ஆணை வெளியிடப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.