போதைப் பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசின் ( NASHA MUKT BHARATH ) திட்டத்தின் அடிப்படையில் தமிழகத்திலேயே முதல் முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாகும் டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் மறை மாவட்ட பேராயலயம் கட்டுப்பாட்டிலுள்ள நாகர்கோவிலில் உள்ள திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்கம், சமூகநலத்துறை, திருச்சிலுவை கல்லூரி ஆகியவற்றின் சார்பாக மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான ( NASHA MUKT BHARATH ) போதைப்பொருட்கள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் திட்டத்தின்படி தமிழகத்திலேயே முதல் முறையாக நாகர்கோவிலில் வரும் 6ஆம் தேதி மாநில அளவிலான டிப்ளமோ பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாகவும், தொடர்ந்து 20 வாரங்களில் நடைபெறும் இந்த பயிற்சி வகுப்புகளில் தமிழகத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெங்களூர் போன்ற இடங்களில் இருந்தும் பயிற்சியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் திருப்புமுனை போதை நோய் நலப்பணி இயக்கத்தின் இயக்குநர் அருள்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் செய்தியாளரிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இரண்டு குடும்பம் எடுத்துக் கொண்டால் அதில் ஒரு குடும்பம் போதைக்கு அடிமை என்ற அடிப்படையில் சதவீதம் உள்ளதாகவும், பெரியவர்கள் மட்டுமில்லை சிறியவர்கள் சிறார்கள் பள்ளி மாணவ-மாணவிகள் அனைவருமே இதில் அடிமையாகிவிட்டனர். எனவே போதையை எவ்வாறு தவிர்க்க வேண்டும், அதற்கு என்னென்ன வழிமுறைகள் உண்டு. போதைக்கு அடிமையானவர்களுக்கு தேவையான மருத்துவ பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள், அதில் அடிமையானவர்கள் மீண்டு வருவதற்கு என்னென்ன முறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்த இந்த வகுப்புகளில் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.