கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் விளம்பரம் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் ஆட்சியை நிறுத்திவிடலாம் என்று திமுக அரசு நினைப்பது ஒருபோதும் நடக்காது. மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுச்சியுரை.
மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மத்திய இரண்டாம் பகுதி கழக செயலாளர் ஞானசேகரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட கழக முக்கிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பேசும்போது ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட்டம் கூடுவது பெரிதல்ல எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.நீண்ட நெடிய நாள் இந்த ஆட்சி நீடிக்காது மக்களுக்கு துரோகம் செய்கிற ஆட்சி தான் இந்த ஆட்சி என்றார்.
மேலும் தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு செய்வதறியாது உள்ளார்கள். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பது கூட தெரியாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று விளம்பரம் தேடும் வண்ணம் தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார்.முதலமைச்சர் வரும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பிற்காக காவல்துறையினர் நீண்டநேரம் காத்திருக்க கூடிய அவலநிலை.மேலும் எப்படியாவது விளம்பரம் மூலமாக இந்த ஆட்சியை நிலைநிறுத்த விடலாம் என்று பார்க்கிறார். ஊடகம் மூலமாக நிலை நிறுத்தி விடலாம் என்று பார்க்கிறார்.
இது போதாது என்று சிலர் போலியாக கருத்துக்கணிப்புகளை வெளியிடுகிறார்கள்.இந்த ஆட்சியில் மக்களுடைய ஆதரவு திமுகவிற்கு கிடையாது.திமுக அதற்காக பல்வேறு கட்டங்களில் உழைத்தவர்கள் உண்மை விசுவாசிகள் இன்று தங்களை அதிமுகவில் கிடைத்து வருகின்றனர்.திமுகவிற்கு மாற்று கட்சியாக தமிழக மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு இருக்கக்கூடிய கட்சி என்றால் அது அதிமுக தான்.
2024 அல்லது 2026 ல் தேர்தல் வரும் நிச்சயம் நமக்கான ஒரு நல்ல எதிர்காலம் தரும். நிச்சயம் மீண்டும் நாம்தான் ஆளப் போகிறோம்.அரசியல் வரலாற்றில் ஒரு முறைக்கு இருமுறை திமுக வந்ததே கிடையாது அதிமுக தான் வந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக நாள் ஆண்ட கட்சி என்றால் அது அதிமுக தான். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு கட்சி என்றால் அது மறைந்த எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக தான். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் வார்த்து எடுக்கப்பட்ட அதிமுகவை இன்று இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் சிறப்பாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.மேலும் வரும் காலங்களில் அதிமுகவின் வெற்றிக்காக நாம் இணைந்து பாடுபட வேண்டும் என்றார்.
- திரௌபதி முர்மு சென்னை வருகைபா.ஜ.க. ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு 2-ந்தேதிகூட்டணி கட்சியினரை சந்திக்க சென்னை வருகிறார்.இந்திய ஜனாதிபதி தேர்தல் […]
- முக்கிய அறிவிப்பு வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கி…இந்திய ரிசர்வ் வங்கி, கூகுள் பே, போன்பே, நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. […]
- இன்று உலக கைக்குழுக்கல் தினம்இன்று உலக கைக்குழுக்கல் தினமாக கொண்டாடபபடுகிறது. புதிய நண்பரை சந்திக்கும் போது ,அல்லது நீண்டகாலத்திற்கு பின் […]
- சினிமாவைவிட்டு விலகும் அசாசுர நடிகர் நாசர்..கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக, நடிப்பில் இருந்து நடிகர் நாசர் விலக […]
- பல் துலக்காமல் முத்தம்- மனைவி கொலைகேரளாவில பல்துலக்காமல் முத்தம் கொடுத்த பிரச்சனை மனைவியை கணவர் கொலை செய்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது.கேரள […]
- அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு..,
ஐந்து மணி நேரத்தில் கைக்கு கிடைத்த ஆர்டர்.நெல்லை மாவட்டத்துக்கு ஆய்வுக்கு வந்த அதிகாரிகள், அரசின் திட்டங்களுக்காக காத்திருந்தவர்களுக்கு ஐந்து மணிநேரத்தில் அதனை நிறைவேற்றிக் […] - அரசுப்பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களுக்குத் தடை..!தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களை தற்காலிகமாக […]
- மகாராஷ்டிராவில் நாளை முதல்வராகிறார் தேவேந்திரபட்னாவிஸ்மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ்தாக்ரே பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நாளை (ஜூலை 1) பா.ஜ.க.வின் […]
- அதிகம் செலவாகும் நகரங்கள் எது… வெளியான பட்டியல்..உலகின் அதிகம் செலவாகும் நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் உலக அளவில் முதலிடத்தை ஹாங்காங் […]
- விண்வெளியில் ஒருகொடூரமான நரகம்- புதிய கிரகம் கண்டுபிடிப்புசூரியனை அல்லாது வேறு நட்சத்திரங்களை சுற்றும் கிரகங்கள் தான் எக்சோ பிளானட் அல்லது எக்ஸ்ட்ராசோலார் பிளானட் […]
- சமையல் குறிப்புகள்ராஜ்மா கிரேவி: தேவையான பொருட்கள்: பச்சை மிளகாய் – 5, இஞ்சி – ஒரு துண்டு, […]
- படித்ததில் பிடித்தது1.அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் […]
- பொது அறிவு வினா விடைகள்இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்பட்டவர் யார்?சமுத்திரகுப்தன் செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை வழங்கியவர் […]
- குறள் 236தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று.பொருள் (மு.வ): ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு […]
- அமர்நாத் புனித யாத்திரை தொடங்கியது….காஷ்மீரில் உள்ள புகழ்பெற்ற அமர்நாத் கோவில் புனித யாத்திரை இன்று முதல் தொடங்கியுள்ளது.காஷ்மீரில் உள்ள அமர்நாத் […]