• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

விரைவில் இ-சேவை மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு அறிமுகம்

Byவிஷா

Apr 4, 2025

தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலம் விரைவில் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்பட தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் தொலை தூர பஸ்களில் பயணிக்க முக்கிய பஸ் நிலையங்கள் மற்றும் ஆன்-லைன் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட செயலி (ஆப்) மூலமாகவும் முன்பதிவு செய்து பயணிகள் பயணித்து வருகின்றனர்.
கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய வசதியாக தற்போது தமிழல அரசு போக்குவரத்துக் கழத்தின் சார்பில் இ-சேவை மையங்களிலும் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டுமானாலும் இ-சேவை மையங்கள் மூலமாக ரத்து செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.