


விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் டிபி மில்ஸ் சாலை ஒரு வழி பாதையாக உள்ளது இந்த சாலையில் பேருந்துகள் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் இருந்து திருநெல்வேலி சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற காரை முந்தி செல்லும் பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் சுவர் மீது மோதி சுவர் இடிந்து சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி தப்பினர் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளவில் பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.

இந்த சாலையில் அதிவேகமாக வாகனங்கள் செல்வதால் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

