



கண்களுக்கு விருந்து படைக்கும் விருதுநகர் ஸ்ரீஅருள்மிகு பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம் கழுகு பார்வை காட்சி!!!
விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் தேரோட்டம் கோலாகலம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் “ஆகோ ஐயாகோ” என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். உள்ளூர், வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனிப் பொங்கல் திருவிழாவில், பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களின் ‘ஆகோ ஐயாகோ’ என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தை ஒட்டி விருதுநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேரானது நகரின் முக்கிய வீதிகளில் ஆடி அசைந்து வரும் கழுகு பார்வை காட்சிகள் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் அமைந்துள்ளது.

