• Fri. Apr 18th, 2025

முகவூர் மாரியம்மன் கோவில் திருவிழா..,

ByKalamegam Viswanathan

Apr 9, 2025

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 3ஆம் தேதி துவங்கியது அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருவிழாவுக்கு நடைபெற்று வருகிறது.

இதில் ஏழாம் நாள் திருவிழாவாக இன்று அக்னி சட்டி ஆயிரம் கண்பானை முளைப்பாரி பூப்பெட்டி ஊர்வலம் நடைபெற்றது முன்னதாக கேரளா செண்டை மேளம் முன் செல்ல அதைத் தொடர்ந்து அக்னி சட்டியில் 21சட்டியில் எடுத்தும் பின்பு அக்கினி சட்டி முளைப்பாரி பூப்பெட்டி ஊர்வலம் நடைபெற்றது.

இதில் அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி சட்டி எடுத்தனர். 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூப்பெட்டி எடுத்து வீதி உலா வந்தனர். ராஜபாளையம் தளவாய்புரம் முகவூர் சேத்தூர் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீதி உலாவை பக்தியுடன் கண்டுகளித்தனர். விழா ஏற்பாடுகளை முகவூர் தெற்கு தெரு இந்து நாடார் உறவின் உரை நிர்வாகிகள் செய்திருந்தனர்.