• Thu. Mar 27th, 2025

அரசு பேருந்து தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து

BySeenu

Feb 23, 2025

பிரேக் பிடிக்காத அரசு பேருந்து, சாலையில் நடுவே உள்ள தடுப்புச் சுவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக 40 பயணிகள் உயிர்த்தப்பினர்.

தமிழக – கேரளா எல்லை பகுதியான கோவை வேலந்தாவளம் பகுதிக்கு கோவை உக்கடம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை வேலந்தாவளம் பகுதியில் இருந்து கோவை, உக்கடம் நோக்கி வந்த வழித்தடம் என் 48 என்ற எண் கொண்ட அரசு பேருந்து சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் வரும் போது திடீரென பிரேக் பிடிக்காததால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரில் மோதி நின்றது. அந்தப் பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குனியமுத்தூர் காவல் துறையினர். அந்தப் பேருந்தில் இருந்து பயணிகளை வேறு பேருந்துக்கு மாற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வெரைட்டி ஹால் போக்குவரத்து பிரிவு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசுப் பேருந்து பிரேக் பிடிக்காமல் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் சம்பவம் பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது.