• Sun. Mar 16th, 2025

நான்கு சக்கர ஆட்டோவை திருடிய இருவர் காவல் துறையினரிடம் ஒப்படைப்பு

BySeenu

Feb 23, 2025

கோவையில் நான்கு சக்கர ஆட்டோவை திருடிய இருவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த வைரலாகும் செல்போன் வீடியோ காட்சிகள் !!!

கோவை, காந்திபுரம் பகுதியில் வீட்டிற்கு முன்பு நிறுத்தி இருந்த நான்கு சக்கர ஆட்டோ காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதன் உரிமையாளர் இது குறித்து காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்து உள்ளார். இந்நிலையில் அந்த ஆட்டோ புலியங்குளம் பகுதியில் சென்ற போது அதனை அப்பகுதியினர் மடக்கி பிடித்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். அப்பொழுது அவர்களிடம் எந்தப் பகுதி என்று அப்பகுதி பொதுமக்கள் கேள்வி எழுப்பும் போது, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்றும் ஹோட்டலில் சப்ளையராக வேலை செய்வதாகவும், மற்றொரு நபர் வடவள்ளியைச் சேர்ந்த குமார் என்று பெயர்களையும், அவர்கள் வசிக்கும் பகுதியையும் பொய்யாக கூறி உள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில் காந்திபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிடிப்பதற்குள் ஒருவன் தப்பி ஓடி உள்ளான். மற்றொருவனை மடக்கிப் பிடித்த காவல் துறையினர் அவனிடம் நடத்திய விசாரணையில் துடியலூர் பகுதியைச் சேர்ந்த குஞ்சான் என்ற விவேகானந்தர் தப்பி ஓடியதாகவும், அதில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பதும், அவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்து உள்ளது. மேலும் காவல் துறையிடம் சிக்கிய செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். தப்பியோடிய குஞ்சான் என்ற விவேகானந்தனை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.