

மத்திய அரசு ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று எழுத்தாளர்கள்,இலக்கியவாதிகள்,சமூக ஆர்வலர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்டு பத்மஸ்ரீ, பத்மபூசன் விருதுகளை அளித்து கௌரவித்துள்ளது,இதையடுத்து பொள்ளாச்சி இலக்கியவாதி சிற்பி பாலசுப்ரமணியம் பத்மபூஷன் விருதுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிற்பி பாலசுப்ரமணியம் கூறுகையில் தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள என்னைப்போன்ற இலக்கியவாதிகளை மத்திய அரசு தேர்வு செய்து பத்மபூஷன் விருது அளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனவும் 50 ஆண்டுகால பணிக்கு கிடைத்த விருது ஆகவும் இலக்கியவாதி நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
