• Tue. Sep 10th, 2024

இரண்டு நாளில் நல்ல செய்தி வந்து சேரும் .. முதல்வர் சூசகம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் முக்கியமான அறிவிப்பு ஒன்றை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விரைவில் அந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிறைவடைந்து உள்ளது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது.

எப்போதும் போல சென்னையில் இந்த முறையும் மக்கள் அதிகமாக வாக்களிக்கவில்லை. சென்னையில் நேற்று காலையில் இருந்து பிற்பகல் வரை வாக்குப்பதிவு மையங்களில் கூட்டம் குறைவாகவும், மந்தமாகவும் காணப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகி உள்ளன. அதேபோல் சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இந்த நிலையில் கடந்த 16ம் தேதி சென்னை 45-வது புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைத்து நேற்று சென்னையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், இன்னும் 2 நாட்களில் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவேன் என்று கூறினார். ஒரு முக்கியமான நல்ல செய்தியை கூறுவேன். இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இப்போது நான் நலத்திட்டங்கள், அறிவிப்புகள் எதையும் வெளியிட கூடாது. அது தேர்தல் விதி மீறலாக இருக்கும், என்று முதல்வர் புதிராக பேசி இருந்தார்.

இந்த நிலையில்தான் நேற்று தேர்தல் முடிந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலினின் அந்த நல்ல செய்தி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி ஏற்கனவே நம்மிடம் பேசிய தலைமை செயலக வட்டாரங்கள், தேர்தல் முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் அந்த சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிடுவார். குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் கொடுக்கும் அறிவிப்புதான் அது என்று பலர் நினைக்கிறார்கள்.

ஆனால் முதல்வர் வெளியிட போகும் அறிவிப்பு அது இல்லை. கோவை மற்றும் சேலம் மாநகராட்சிகளை கைப்பற்ற திமுக படாத பாடு பட்டு வருகிறது. இதற்காக தான் வெளியூரில் இருந்து ஆட்களை நியமித்து கோவை சிறப்பு அந்தஸ்து பெற்ற மாநகராட்சி போல பராமரிக்கப்பட்டது. கோவையை ஜெயிக்க வைக்கும் பொறுப்பும் உதயநிதி ஸ்டாலினிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது புரிந்திருக்கும் என்ன நல்ல செய்தி என்று கோவை வென்றால் அமைச்சர் பதவி உதயநிதிக்கு தானாக தேடி வரும்.

ஆனால் எந்த அமைச்சரிடம் பரஸ்பரம் பேச போகிறார்கள் என்று தெரியவில்லை.ஆனால் கோவை வென்றால் உதயநிதிக்கு அமைச்சர் பதவியை கிப்ட் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் தயாராக உள்ளதாக தலைமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *