

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று 10 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை 59 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை தொட்டது. இதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 21-ம் தேதி தங்கம் விலை 60 ஆயிரத்தை கடந்து மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின் தங்கம் விலை 64 ஆயிரம் ரூபாயைத் தொட்டது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனையாகிறது.
அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு சவரனுக்கு ரூ.240 குறைந்து ஒரு சவரன் 64ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 40 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 64 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

