• Wed. Oct 15th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நாளுக்கு நாள் எகிறும் தங்கம் விலை… சவரனுக்கு ரூ.160 உயர்வு!

ByP.Kavitha Kumar

Mar 20, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இந்த ஆண்டில் ஜனவரி 29-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. ஜனவரி 31-ம் தேதி ஒரு பவுன் ஆபரண தங்கம் ரூ.61,000-ஐயும், பிப்ரவரி 1-ம் தேதி ரூ.62,000-ஐயும் தாண்டியது. பிப்ரவரி 11-ம் தேதி ரூ.64,480 என்றும், 20-ம் தேதி ரூ.64,560 என்றும் அதிகரித்தது.

இதன் பிறகு, ஒருசில நாட்கள் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.64,600 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இதன்பிறகு, ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. கடந்த மாதம் 16-ம் தேதி ஒரு பவுன் ரூ.63,120-க்கு விற்பனையானது. பின்னர், படிப்படியாக அதிகரித்து ரூ.64,440-க்கு விற்பனையானது. பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. நேற்று (மார்ச் 19) கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ரூ.8,290-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து, ரூ.66,320-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று (மார்ச் 20) அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,310-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.66,480-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், 1 கிராம் வெள்ளி ரூ.114-க்கும், 1 கிலோ வெள்ளி 1,14,000க்கும் விற்பனையாகிறது.