• Fri. Mar 29th, 2024

ஒரே நாளில் பவுனுக்கு ரூ.432 குறைந்த தங்கம் விலை

ByA.Tamilselvan

Sep 16, 2022

தங்கம் விலை தொடர்ந்து சரிந்துவருவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது.
தங்கம் விலையில் சில நாட்களுக்கு முன்பு ஏற்ற-தாழ்வு இருந்து வந்தது. இதற்கிடையே கடந்த 13-ந்தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது. நேற்று பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்றது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்தது. அதிரடியாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.432 குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுன் ரூ.37 ஆயிரத்து 8-க்கும், ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 626-க்கும் விற்றது. வெள்ளி கிலோவுக்கு ரூ.500 அதிகரித்து ரூ.61 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.61.60-க்கு விற்கிறது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருவது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது. 4 நாட்களில் தங்கம் பவுனுக்கு ரூ.952 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *