• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குட்நியூஸ்… அதிரடியாய் சரிந்த தங்கம் விலை!

ByP.Kavitha Kumar

Mar 11, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் 30-ம் தேதி ஒரு சவரன் தங்க நகை 59 ஆயிரம் ரூபாயை கடந்து புதிய உச்சம் தொட்டது. அதனைத் தொடர்ந்து நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கம் என இருந்தது. இந்த நிலையில் கடந்த 21-ம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை 60 ஆயிரம் ரூபாயைக் கடந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன்பின் படிப்படியாக விலை உயர்ந்து ஒரு சவரன் நகை 64 ஆயிரம் ரூபாயை எட்டியது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. நேற்று (மார்ச் 10) கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து 8,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து 64,400ரூபாய் க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து 8,020 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து .64,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று (மார்ச் 11) ரூ.1 குறைந்து 107 ரூபாய்க்கு விற்பனையாகிறது.