• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ் பெண்ணை திருமணம் செய்யப்போகும் கிளென் மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் கிளென் மேக்ஸ்வெல் கடந்த சீசனில் அபாரமாக விளையாடினார்.
இதையடுத்து பெங்களூரு அணி அவரை ரூ.11 கோடிக்கு தக்க வைத்தது. க்ளென் மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியாவில் வளர்ந்த தமிழ்ப் பெண்ணான வினி ராமன் காதலித்தார். வின்னி ராமன் ஆஸ்திரேலியாவில் பார்மசி படித்தார். இந்திய முறைப்படி 2020-ம் ஆண்டு நிச்சயதார்த்தம் நடந்தது.

கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து லாக்டவுனை நெருக்கடிக்கு ஆளாக்கியதால் அவர்களின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், கிளென் மேக்ஸ்வெல்லின் திருமணம் மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது.சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த வினி ராமன் தமிழ் பெண் என்பதால் இவர்களின் திருமண அழைப்பிதழ் தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேக்ஸ்வெல்-வின்னி ராமன் ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.